என் பிள்ளையை நான் தொலைக்கவில்லை.
என் கணவர் எனக்கு வேண்டும். தந்தையை மீட்டுத்தாருங்கள். எமது அண்ணா எங்கே? சகோதரன் எங்கே? சகோதரி எங்கே? தோழன், தோழிகள் எங்கே?துப்பாக்சிச் சத்தங்கள் ஓய்ந்தாலும் இத்தகைய அவலக்குரல்கள் இன்னமும் வட,கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் அடங்கவில்லை.
ஆயுதப் போர் முடிந்து 5 ஆண்டுகள் கடந்தும் உறவுகளைக் காணாது தேடி அலையும் அவலம் தொடர்ந்துகொண்டுதான இருக்கிறது.
இறந்தவர்கள் எத்தனை பேர்...?காணாமல் போனவர்கள் எத்தனை...?
காணாமல் போனவர்களை கண்டு பிடித்தும் அவர்களை மீட்க வழியில்லாமல் அவதியுறும் குடும்பங்கள் எத்தனை?
இதற்;கொல்லாம் முற்றுப்புள்ளியின்றி அழுகையும் அவலங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
காணாமல் போனான் என்று சொல்வதற்கு என் பிள்ளையை நான் தொலைக்கவில்லை.
இரானுவத்தின் கைகளிலேயே ஒப்படைத்தேன். என் பிள்ளையை என்னிடம் திரும்பத்தந்து விடுங்கள் என்று கதறுகிறார் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த காணாமல் போன புதர்சன் என்பவரின் தாய் மங்கையற்கரசி.
எனக்கு இப்போது 52 வயதாகின்றது. நானும் என்ற கணவரும் புதுக்குடியிருப்பில தனிய வசிக்கிறம். இரண்டு ஆண் பிள்ளைகளும்ஒரு பெண்பிள்ளையும் இருந்தார்கள்.
இரானுவத்தினரிடம் ஒப்படைத்த மகனைத்தவிர மற்றைய இருவரும் திருமணம் முடித்து விட்டார்கள்.
விடுதலைப்புலிகள் என்ற பிள்ளை புதர்சனை 5 வருசத்துக்கு முன்னர் கட்டாயமாக பிடிச்சுட்டு போனார்கள். ஆனாலும் என் பிள்ளை அங்கிருந்து தப்பி ஓடிவந்துட்டான்.
அதன் பின்னர் இறுதிக்கட்ட யுத்தம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியான 2009ஆம் ஆண்டு வட்டுவானில் எனது குடும்பத்தினருடன் வந்துகொண்டிருந்தோம்.
அப்போது வழிமறித்த இரானுவத்தினர் விடுதலைப்புலி இயக்கத்தில் இருந்தவர்கள் நீங்களாகவே சரணடைந்து விடுங்கள.; நாங்கள் உங்களைப் பிடித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம். என்று எச்சரித்தார்கள்.
அதற்கு பயந்த நான் எனது பிள்ளையை அவர்களின் கைககளில் ஒப்படைத்தேன்.
'நீங்கள் போங்கள் உங்கள் பிள்ளையை விசாரித்த பின்னர் உங்கள் இடத்திற்கே கொண்டுவந்து விட்டுவிடுகின்றோம்' என இராணுவத்தினர் எங்களிடம் கூறினார்கள்.
ஐந்து வருடங்கள் ஆகியும் என்பிள்ளை எங்கே என்று இதுவரையும் எதுவித தகவலும் இல்லை.
நாங்கள் முகாமில் இருந்தவேளை யோசப்ஊயுஆP இல்; பதிவு செய்தோம். ஐஊசுஊ மற்றும் குறுமன்காட்டு மனித உரிமை இல்லம் போன்றவற்றிலும் பதிவுகளைச் செய்தோம். எங்கெல்லாமோ அலைந்துவிட்டோம். இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
எனது பிள்ளையை நான் எங்கே கேட்பது? அரசாங்கத்திடம்தானே நான் எனது பிள்ளையைக் கொடுத்தேன். அவர்களிடம்தானே நான் கேட்கவேண்டும். எனக்கு பணம் தேவையலை;லை எனது பிள்ளையைத் தந்தாலே போதும்
இப்போதும் நான் கடவுளிடம் மன்றாடிக்கொண்டுதான் இருக்கிறேன் எனது பிள்ளையை என்னிடம் தந்து விடு என்று.
என் உள் மனம் சொல்கின்றது அவன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் என்று எனது பிள்ளை விரைவிலேயே என்னைத்தேடி வந்துவிடுவான்.......'
கதறிய அந்தத்தாயின் முகத்தில் நப்பாசை கலந்த நம்பிக்கை.
தே.பிரசாந்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக