சொர்க்கத்தின்
குழந்தைகள்;;;
உலகின் சிறந்த படங்களின் வரிசையில் ஈரானியப் படங்களுக்கு கணிசமான இடமுண்டு; பெரும்பாலும் கலைப்படங்களாவே வெளிவருகின்றதனாலேயோ என்னவோ இத்திரைப்படங்கள் உலகளவில் பேசப்படுவது மட்டுமன்றி பல விருதுகளையும் பெற்று விடுகின்றன. இந்தவகையில் 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் மசித்மசிதி இயக்கி வெளிவந்த childrens of heaven (சொர்க்கத்தின் குழந்தைகள்) என்ற திரைப்படம் பலராலும் கவரப்பட்ட திரைப்படமாகும். காலத்தால் பழைய படமாக இருந்தாலும் தற்போது எடுத்துக்காட்டப்படவேண்டிய முக்கியமான படங்களில் ஒன்றாகும.; இதன் கதை அண்ணன் தங்கையுடன் ஒரு சோடிக் காலணியையும் வைத்து நகர்த்தப்படுகிறது.சிறுமி சாராவின் காலணிகள் தைக்கப்படுவதிலிருந்து தொடங்கும் படம், காலணியை மையமாக வைத்தே கதை நகரப்போவதனை உணர்த்தியிருக்கிறார்போலும் அக்காலணிகள் அண்ணனான அலியின் கவனக்குறைவினால் மரக்கறி கடையினில் தொலைந்து போய்விடவே காலணியில்லாமல் பாடசாலைக்குச் செல்லவழியில்லாது அண்ணனின் காலணிகளையே இருவரும் மாற்றி மாற்றிப் பாவிப்பதும், தொலைந்துவிட்ட காலணியைத் தேடுவதுமாக இருக்கவே முடியாமல் போக என்னசெய்வது ஏது செய்வது எனத்தெரியாமல் திக்கு முக்காடுவார்கள்.,
சாதாரணத் இனிப்புத்தொழிலாளியான அப்பா, சிறுகுழந்தையுடன் கஷ்ரப்படும் அம்மா, புதிதாக காலணிகள் வாங்கவியலாதளவு வறிய குடும்பம் இவற்றில் சகோதரர் இருவரின் தூய உள்ளங்களும சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டள்ளது. காலணிகள் தனது கவனக்குறைவினால் தொலைந்தமை வீட்டிற்குத் தெரியவந்தால் அப்பாவிடம் அடி வாங்க நேரிடுமென்பதால் எவரிடமும் சொல்லவேண்டாமென்றும், தனது காலணிகளைப் பயன்படுத்தும்படியும் அலி சாராவைக் கெஞ்சுவதும்.. வேறுவழியின்றி அவள் ஒத்துக்கொள்வதும்..தங்கை அண்ணன் மீது கொண்ட பாசத்தின் வெளிப்பாடாக காணப்படுகின்றது. தான் செய்த தவறுக்காக தங்கையின் சிறிய பென்சிலுக்குப் பதிலாக அலி நீண்ட பென்சிலொன்றை அவளுக்குக் கொடுப்பது மட்டுமன்றி ஆசிரியர் தனக்களித்த பேனாவையும் தங்கைக்கே கொடுத்து விடுகின்றான். அண்ணனின் காலணிகளோடு பாடசாலை செல்லும சாரா தனது பாடசாலை முடிவடைந்தவுடன் மூச்சிரைக்க ஓடிவந்து அலியிடம் காலணிகளை கொடுப்பதும்;, அலி அதனை மாற்றிக்கொண்டு வேகமாக ஓடுவதும் என படம் தொடர்ந்து செல்லுகின்றது. இது போன்றதொரு சந்தர்ப்பத்தில் சாரா காலணிகளை அலியிடம் கொடுக்க வரும்போது ஒற்றை காலணி தவறி வாய்க்காலுக்குள் விழுவதும் அதனால் சாரா படும்பாடும் மனதை உருக்கும் காட்சியாகும்.
இவ்வாறாக இருந்து என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறார்கள். ஏவ்வாறு இந்நிலையிலிருந்து மீளப்போகிறார்கள் என்பதே மீதிக்கதையாகும். சூழழுக்கேற்ற இசைஇ மிக ஒழுங்குபடுத்தப்பட்ட காட்சியமைப்பு என்பன படத்தை மேலும் மெருகூட்டுகின்றன. நல்லதொரு கலைப்படத்தை பார்த்த திருப்தியளிக்கும் இப்படத்தை மொழி வேறுபாடின்றி; எம்மவரிடையே பார்கப்படுவதும் பேசப்படுவதும் உலகத்தரமான படங்கள் உருவாவதற்கு அடித்தளமாக அமையும்.
தே.பிரசாந்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக