பூலோகத்தின் சொர்க்கபுரி... மழையும் வெயிலும் அளவாகப் பொழிந்து வாழ்வை வளப்படுத்தும் தேசம்... எங்கும் பச்சைப்பசேல்... இது வேறெங்குமில்லை. நம் இலங்கைத் திருநாடுதான் இப்படி இருந்தது. அதனால்தான் மேலை நாட்டவர்கள் இங்கு வந்து ஆட்சிபுரிந்து இலாபமும் கண்டனர்.
பூலோகத்தின் சொர்க்கமான இந்நாடு இன்று காலநிலை மாற்றத்தால் வளங்கள் மட்டுமன்றி மனிதர்களும் வதைபடுகின்றனர். காலங்கெட்ட காலத்தில் தெற்கிலே மழைபொழிந்து வெள்ளத்தில் ஊரழியும். வடக்கிலோ மாரிபொய்த்து வெப்பத்தால் நிலம் வெடிக்கும்.
இலங்கையின் வடக்கில் இம்முறை மழைபெய்யாமல் வரட்சி ஏற்பட்டுள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக யாழ்ப்பாணத்திலிருந்து மேற்கே சுமார் 22 கிலோமீற்றர் துரரத்தில்; உள்ள காரைநகர்ப் பிரதேசத்தை எடுத்துக் கொள்ளலாம்.
நான்கு பக்கங்களும்; கடல் நீரினால் ச10ழப்பட்ட காரைநகரில் குடிநீருக்கான தட்டுப்பாடு; என்றுமில்லாதவாறு இவ்வருடம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இங்கு வாழ்பவர்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கடற்றொழிலையே செய்து வருகின்றனர்.சிறுபோக விவசாயத்தை நம்பி நெல் விதைத்தவர்களின் பயிரும் நிலமும் கருகின.அவ்வப்போது தரைநனைக்கும்; பசப்பு மழையினால் எவ்வித பிரயோசனமுமின்றி ஏங்கி நிற்கிறார்கள் இக்கிராம விவசாயிகள்.
பயிர்கள் வளரவில்லை: மிருகங்களுக்கான புல்இவைக்கோல் போன்றவற்றிற்கும் வழியில்லை:குளம் வற்றிவிட்டது: கிணறும் வற்றிவிட்டது: வற்றிய கிணறு ஊற்றெடுக்க வழியின்றி நிலமும் வறண்டுவிட்டது.இங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் குடிநீருக்காக எவ்வளவு அலைகின்றது என இக்கிராமத்தைச்சேர்ந்த திருமதி.புஷ்பரத்தினம் (வயது 46)இப்படி விபரிக்கிறார்... ' எனக்கு ஆறு பிள்ளைகள் இருக்கிறார்கள் கணவரிற்கு வருத்தம். ஏன்ற பிள்ளைகள்தான் ஒருவர்மரறிஒருவர் தண்ணிக்கு போவாங்க வந்தாப்பிறகுதான் பள்ளிக்கூடம் போவாங்க ஆனா தண்ணி சிலநேரம் கிடைக்கிறதில்ல. பிரதேச சபை தண்ணீரும் இங்கால எப்பவாதுதான் வரும்..' இவ்வாறு தன் உள்ளக்கிடக்கை மூலம் அனைவரினதும் அவல நிலையையும் தெளிவு படுத்தினார் அவர்.
தண்ணீர் பிரச்சினையைச் சமாளித்துக் கொள்வதற்காக இக்கிராம மக்கள் பிரதேச சபையையும் அரசசார்பற்ற நிறுவனங்களையுமே நம்பி இருக்கின்றனர். அவர்கள் ஒன்றுவிட்ட ஒரு நாளைக்குத் தரும் 35 லீற்றர் நீரே ஒவ்வொரு குடும்பத்தினதும் நீர்த்தேவையை சமாளிக்க உதவுகின்றது. ஆனாலும் அந்நீரை சேமித்து வைப்பதற்காகப் பிளாஸ்ரிக் நீர்த்தாங்கிகளையும் சிறு பரல்களையும் வேண்டுவதற்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார்கள். வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு இது எட்டாக்கனியாகவே உள்ளது.
புpளாஸ்ரிக் தாங்கிகளின் விலையானது சந்தை விலையைவிட அதிகமாக இருந்த போதிலும் வேறு வழியின்றி மக்கள் அவற்றை வாங்கியே ஆகவேண்டியுள்ளது. நீர்தாங்கி வேண்ட வழியில்லாதவர்கள் குறிப்பிட்ட ஓரிரண்டு கிணறுகளில்; ஊறியிருக்கும் நீரைப் பெறுவதற்காக வெகுதூரம் செல்வார்கள்.ஆனாலும் எல்லோரும் அவ்வாறே செல்வதனால் சனநெருக்கடியும் ஏற்படுகின்றது. இதனால் இங்குள்ளவர்கள் அதிகாலை 2 மணிமுதல் காலை புலரும் வரை இவ்வாறான கிணறுகளுக்கு முன் வரிசை கட்டி விடுகிறார்கள். பெரும்பாலும் இப்பணிக்காக சிறுவர்களும் உட்படுத்தப்படுவதினால் சிறுவர்களின் கல்விநிலை பெரிதும் பாதிப்படைகின்றது.
காத்து நின்று அவர்கள் நீரைப்பெற்று விடுகிறார்களா என்றால் அதுவுமில்லை. ஒரு கிணற்றில் அதுவும் ஒரு சாண் கூட நீரின் உயரமில்லாத கிணற்றில் எத்தனை பேர்தான் நீரைப் பெற்றுவிட முடியும்? இவ்வாறு நீர் எடுக்க வரும் எஸ் .கந்தசாமி.என்னும் பெரியவர் 'இங்;க மூன்று நல்லதண்ணீர்க் கிணறுகள்தான் இருக்கு. ஆனா எல்லாத்திலயும் தண்ணி கொஞ்சம்தான் இருக்கும் . நிறையப்பேர்; வருவாங்க தண்ணி எல்லாருக்கும் கிடைக்காது.நாங்க காத்திருந்திட்டு திரும்பப் போயிடுவம்.அந்தநாள் தண்ணிக்கு படாதபாடுபடுவோம்'என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
நீரின் கிராக்கி உயர்ந்துவிட்ட நிலையில் இங்கு தண்ணீர்ச் சந்தைகளும் தோற்றம் பெற்று வியாபாரமும் சூடு பிடிக்கின்றது. ஒரு லீற்றருக்கான விலையாக 60சதம்இ 80சதம்இ 1ரூபாய் என நிர்ணயித்து வழங்குகிறார்கள் புதிய நீர் வியாபாரிகள். தண்ணீர் தேவையானபோது காசு இல்லாதவர்கள் அயல் வீட்டாரிடம் நீரைக் கடன் வேண்டுகிறார்கள்.
குடிப்பதற்கும் நீர் கிடைக்காத இங்கே குளிப்பது போன்ற பிறசெயற்பாடுகளிற்கான நிலையை விபரிப்பதற்கு வார்த்தைகளில்லை. ஒரு நாள் இடைவெளியில் ஊறும் நீர்க் கிணற்றிலே எத்தனைபேர் குளிக்கமுடியும்? ஒரு வாளி அள்ளி குளித்த பின் அடுத்த வாளிக்கு நீர் ஊறும்வரை காத்திருக்கவேண்டும். அவ்வாறு நீர் கிடைத்தாலும் அவை மிகவும் கலங்கிய அசுத்தமான நீராகவே உள்ளது. இந்நிலையில் குளிப்பது போன்ற நிகழ்வுகளில் கஞ்சத்தனத்தை காட்டவே பொடுகு உட்பட வேறுசில தோல் நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளதாக அச்சுவேலி ஆயுள்வேத வைத்தியசாலை வைத்தியர் ள.செல்வநாதன் கூறுகின்றார். மேலும் தோலில் வட்டமாக அரிப்பு ஏற்படுதல்இ செதில்போன்று தோற்றமளித்தல் போன்ற விளைவுகளும் ஏற்படுமென அவர் குறிப்பிடுகின்றார்.
தமக்கே நீரில்லாதபோது தங்கள் கால் நடைகளுக்கு எவ்வாறு நீர் அளிப்பதென எண்ணிய இவர்கள் அவற்றைக் கட்டாக்காலிகளாக அலையவிடுகின்றனர்;. அவையும் காய்ந்து கருகிய புற்களையும் ஏனையவற்றையும் உண்டு தாகம் எற்பட்டுவிடவே நீரைத்தேடி அங்குமிங்கும் அலைந்து பெரும் அவதியுறுகின்றன.
இன்னும் 20 வருடங்களில் நீருக்கான பஞ்சம் இலங்கையில் ஏற்படுமென பல புவியியலளர்கள் எதிர்வுகூறப்பட்ட இந்நிலையில் இன்னும் சிலகாலங்களிலேயே அந் நிலை வந்துவிடப்போகிறது போலுள்ளது இந்தநிலை நீடித்தால் வரட்சியால் மனிதர்கள் செத்து வீழ்வதனைத்தடுக்க முடியாது.இதற்கு காரைநகர் சாட்சியாக உள்ளது.
வெறுமனே தண்ணீரை பங்கிட்டு வழங்குவதுடன் தம்வேலை முடிந்ததென எண்ணாது தண்ணீர்ப் பிரச்சினையை தீர்க்க நீண்ட காலத் திட்டம் தீட்டி செயற்படுத்துவதே அரசினதும் அதன் அதிகாரிகளினதும் முக்கிய பொறுப்பாகும்.இது நிறைவேற வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
தே.பிரசாந்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக